» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி: நிர்வாகத்தினர் குற்றச்சாட்டு!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:13:21 PM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர் நீக்கப்பட்ட விவகாரம் மூலம் கல்லூரிக்கு சிலர் அவப்பெயர் ஏற்படுத்த முயல்வதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக காரபேட்டை மகமை செயலாளர் விநாயகமூர்த்தி, காமராஜ் கல்லூரி கல்வி குழு பொருளாளர் முத்துசெல்வம் மற்றும் நிர்வாகத்தினர் இன்று இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி, காமராஜ் மகளிர் கல்லூரி மற்றும் காமராஜ் பள்ளி சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 5ஆயிரம் மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு அரசால் A+ அங்கிகாரம் தரக்குறியீடு மற்றும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவர் வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். 2ஆம் ஆண்டில் கல்லூரி முதல்வரிடம் தகராறு செய்துள்ளார். 3ஆம் ஆண்டில் கல்லூரி செயலாளரை தரக்குறைவாக பேசினார்.
தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வந்ததால் அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் கல்விக் கட்டணத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதால் நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆதாய நோக்கம் கொண்ட சிலர் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், தங்களுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வண்ணம் கல்லூரியில் பயிலும் மாணவர்களை மூளைச்சலவை செய்து வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் : ஆட்சியர் ஆணை வழங்கினார்!
புதன் 26, மார்ச் 2025 5:21:43 PM (IST)

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

தமிழ்ச்செல்வன்Feb 18, 2025 - 06:54:55 PM | Posted IP 162.1*****