» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி கல்லூரி முன்பு மாணவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 11:16:46 AM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் உட்பட 3பேர் கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்துள்ள அந்த மாணவர் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்ரீநாத், சந்தான செல்வம் ஆகிய 3பேர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி முன்பு  காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,"கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் நீக்கம் செய்துவிட்டு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். கல்லூரியில் கல்விக் கட்டணத்தில் ஊழல் நடக்கிறது. ஏழை, எளிய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கல்விக் கட்டணம் குறித்து அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் கனவையும், நோக்கத்தையும் சிதைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

கார்த்திFeb 19, 2025 - 12:27:31 PM | Posted IP 172.7*****

அப்படி எந்த ஒரு கட்சிக்கும் ஆட்கள் சேர்க்க வேண்டும் என்று யாரும் இங்க போராடவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு தான் எவ்வளவு பணத்தை அரசு நிர்ணயித்த தொகையை விட அளவுக்கு அதிகமாக வாங்குகிறார் என்று தெரியும்.அந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்று தான் இது வரை அமைதியாக இருக்கிறார்களே தவிர யாரும் போராட்டம் நடத்தும் மாணவர்களை தவறாக நினைக்க வில்லை. இந்த ஒரு மாணவனை அவர்கள் பழிவாங்க வில்லை அதற்கு முன்பே அதிகமாக கல்வி கட்டணம் செலுத்த மறுத்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தி பின்னர் அவர்களின் முன்னால் நின்ற மற்றும் பேச்சுவார்த்தைக்கு சென்ற மாணவ மாணவிகளை சஸ்பெண்ட் செய்தனர் அதனை கண்டித்த தான் இந்த மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் சட்ட முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது.அதற்கு பதில் தராமல் அந்த மாணவனை நிரந்தர நீக்கம் செய்து மற்ற மாணவர்கள் யாரும் இந்த கல்வி கட்டணம் பற்றி பேசாமல் இருக்கவே இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள் என்பதை ஒரு சில மக்கள் அறிய வேண்டியது அவசியம். அப்படி போராட்டத்தை தவறாக புரிந்து பேசும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ஒரு கேள்வி ❓அப்படி நீங்களே கல்லூரிக்கு சென்று ஒரு ஒரு மாணவர்களை தனியாக அவர்களிடம் கட்டணம் பற்றி கேளுங்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று தெரியும்????..... அரசுதரப்பு பேச்சுவார்த்தையே மதிக்காமல் அதை மீறி செயல்படும் அந்த கல்லூரியின் ஒரு சில நிர்வாகிகள் அவர்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.அரசு நிர்ணயித்த கல்வி த்தொகையை தான் நீங்கள் வாங்குகிறார்களா? அதற்கு இரசீது கொடுக்கிறார்களா? சுயநிதி பாடப்பிரிவில் எவ்வளவு கட்டணம் என்றும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் எவ்வளவு கல்வி கட்டணம் என்றும் கல்லூரி தகவல் பலகையில் அந்த விவரங்களை இருக்கிறதா??? என்று ஆய்வு செய்து பின்னர் நீங்கள் அந்த போராடும் மாணவர்களை பற்றி கேள்வி கேளுங்கள் 💯 கல்விகண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் புகைப்படத்தை நீக்கிவிட்டு வேற லோகோவை வைத்து இருக்கிறார்கள்.இது உங்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறதா???

அ.ஆனந்த கண்ணன்Feb 18, 2025 - 11:54:39 AM | Posted IP 172.7*****

கட்சிக்கு ஆள் பிடிக்க கல்லூரியை தேடும் கயவர்களை பெற்றோர்கள் இனம்கண்டு கொள்ள வேண்டும் கட்சிக்கு பின் சென்றால் பட்டதாரி ஆக முடியாது . கூலிதொழிலாளி யாக தான் ஆக வேண்டும்!

StalinFeb 18, 2025 - 11:46:23 AM | Posted IP 162.1*****

கல்வி கட்டணம் என்று மாணவர்களிடம் பணம் பரித்து பண வேட்டை தடுத்து நிறுத்த போராடிய மாணவரை நீக்கம் செய்தது தவறு எனவே மாணவர்கள் போராட்டம் சரியானது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory