» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 24, பிப்ரவரி 2025 12:38:16 PM (IST)

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம். அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர்  அறிவித்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்று தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் (மார்ச் 15) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory