» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிப்.27ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 5:43:22 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 27.02.2025 அன்று 4.30 பி.ப மணியளவில் திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:09:33 PM (IST)

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)
