» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:19:35 PM (IST)

நெல்லையில் செல்போனில் ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை பேட்டை சேரன்மகாதேவி ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனம் வாட்டர் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி ஒரு கல்லூரியில் சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்ற மாணவி பிரியதர்ஷினி வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. 

இந்நிலையில் அறைக்குள் இருந்து நாற்காலி விழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டினர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நீண்ட நேரம் தட்டியும் பிரியதர்ஷினி கதவை திறக்கவில்லை. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது பிரியதர்ஷினி சேலையில் தூக்கு போட்டு தொங்கினார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் வந்து பார்த்த போது பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் விரைந்து சென்று பிரியதர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 

பிரியதர்ஷினிக்கு கல்லூரியில் தேர்வு நெருங்கி வரும் நிலையில் அவர் செல்போனில் வெகுநேரம் கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்து திட்டி உள்ளனர். இதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory