» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதல் மனைவியை அடித்துக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 26, பிப்ரவரி 2025 8:40:27 AM (IST)

காதல் மனைவியை அடித்துக்கொன்ற பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி (45). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (34). இவர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த 2007-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜெயலட்சுமி, தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

கடந்த 10-1-2022 அன்று ஜெயலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சுடலையாண்டி தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அவா் அங்கு கிடந்த தேங்காய் துருவியை எடுத்து ஜெயலட்சுமியை அடித்தாா். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, ஜான்பிரிட்டோ ஆகியோர் விசாரணை நடத்தி சுடலையாண்டியை கைது செய்தனர். .

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சுடலையாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார். திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த பழவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சாம்ஜி, நீதிமன்றம் போலீஸ் சீதாலட்சுமி மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory