» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குவாரி, சுரங்க குத்தகைதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி : ஆட்சியர் சுகுமார் தகவல்

புதன் 26, பிப்ரவரி 2025 12:28:41 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரி மற்றும் சுரங்க குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே e-permit வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், சேரன்மகாதேவி, அம்பாமுத்திரம், திசையன்விளை, நாங்குநேரி, மற்றும் இராதாபுரம் ஆகிய வட்டங்களில் சிறுவகை கனிமங்களான சாதாரண கற்கள், கிராவல், பலவர்ண கிரானைட் கற்கள் மற்றும் பெருங்கனிமமான சுண்ணாம்புக்கல் ஆகியவற்றிக்கு குவாரி மற்றும் சுரங்க குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி / சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்து செல்ல ஏதுவாக குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச்சீட்டு இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறையானது செப்டம்பர் 2024 முதல் அமலில் உள்ளது.

இந்நிலையில், வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுத்திடவும், வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டினை (Transport Permit) இணையதள வாயிலாக (E-Permit) வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தின் குவாரி மற்றும் சுரங்க குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக e-permit வழங்கும் நடைமுறை 24.02.2025 முதல் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. எனவே குத்தகைதார்கள் 24.02.2025 முதல் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாகவும், விரைவாகவும் நடைச்சீட்டு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், குத்தகைதாரர்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிகளுக்குட்பட்டு குவாரிப் பணி மேற்கொள்ளவும், வாகன ஓட்டுநர்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது உரிய அனுமதி சீட்டும், கிரஷரிலிருந்து குண்டுக்கல், எம்-சாண்ட், ஜல்லி, கிரஷர் டஸ்ட் போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது உரிய போக்குவரத்து நடைசீட்டும் பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும். அவற்றினை வாகன தணிக்கையின்போது வைத்திருக்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல் குவாரிப்பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்படின் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை 24.02.2025 முதல் www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory