» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த வழக்கில் 4 வாலிபர்கள் கைது: பைக், ஆட்டோ பறிமுதல்
புதன் 26, பிப்ரவரி 2025 9:04:48 PM (IST)
நெல்லையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த வழக்கில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை வண்ணார்பேட்டை அப்பர் சாமி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால். காங்கிரஸ் பிரமுகர். இவரது மனைவி முத்துலட்சுமி (87). வேணுகோபால் இறந்து விட்டதால் முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருந்து வந்தார். கடந்த 15-ந் தேதி இரவு அவர் வீட்டில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்தவாறு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்ததும் முத்துலட்சுமி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்றார்.
உடனே மர்ம நபர்கள் முத்துலட்சுமியின் கைகளை கட்டி போட்டு அவரது வாயில் துணியை வைத்து அடைத்து அவர் கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக தப்பி சென்றனர். அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில் சம்பவம் நடந்த நாள் அன்றும், அதற்கு முன்பும் அந்த வழியாக சென்றவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த முத்துராம் (23), வெள்ளப்பாண்டி (25), ரெட்டியார்பட்டிைய சேர்ந்த சக்கரவர்த்தி (23), ராஜா (25) என்பது தெரிய வந்தது.
இவர்களில் முத்துராம் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், ராஜா ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. தங்களது வீடுகளில் எதுவும் தெரியாதவர்கள் போல் இருந்த அவர்களை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூதாட்டியிடம் பறித்த 15 பவுன் தங்க செயின், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், ஒரு ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நாகர்கோவில் பகுதியில் இருந்து மீட்டனர்.
மூதாட்டியிடம் செயினை பறித்துக் கொண்டு வாலிபர் கள் நான்கு வழிச்சாலையில் நாகர்கோவிலில் நோக்கி சென்றுள்ளனர். இதனால் கொள்ளையர்கள் கேரளாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் அல்லது வெளி மாநில கொள்ளையராக இருக்கலாம் என்று கருதி போலீசார் அங்கு சென்று விடுவார்கள்.
நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் நாகர்கோவிலுக்கு சென்று அங்கு ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை பதுக்கி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:09:33 PM (IST)

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)
