» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தலைவலி தைல டப்பாவை விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை பலி: பாளை., அருகே பரிதாபம்

வியாழன் 27, பிப்ரவரி 2025 8:13:21 PM (IST)

பாளையங்கோட்டை அருகே தலைவலி தைல டப்பாவை விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை  அருகே உள்ள மேலப் பாட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். கட்டிட தொழி லாளி. இவரது மனைவி சிவனம்மாள்(21). இவர்களுக்கு ஆத்விக் முகிலன் என்ற 10 மாத கைக்குழந்தை இருந்தது. நேற்று கண்ணன் வேலைக்கு சென்றுவிட்டார். பகலில் குழந்தையை வீட்டில் விளையாட வைத்து விட்டு சிவனம்மாள் வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். 

நேற்று இரவு 7 மணி அளவில் குழந்தை அழுதுள்ளது. மேலும் திடீரென மயக்கம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவனம்மாள் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த அறையை பார்த்தபோது, தலைவலி தைலம் டப்பாவை விழுங்கியது தெரியவந்தது. இதையறிந்த சிவனம்மாள், உடனடியாக குழந்தையை நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். 

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், நள்ளிரவில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory