» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் பாலம் கட்டும் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

வெள்ளி 28, பிப்ரவரி 2025 10:16:58 AM (IST)

பாளையங்கோட்டை பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நெல்லை மாநகரத்தில் பாளை போக்குவரத்து பிரிவிற்குட்பட்ட பகுதியில் முருகன்குறிச்சி சந்திப்பிலிருந்து மார்க்கெட் சந்திப்பு வரையிலும், சமாதானபுரம் சந்திப்பிலிருந்து நீதிமன்றம் சந்திப்பு வரையிலும் நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினரால் 6 புதிய பெட்டிப்பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது. 

இந்த பணிகள் நாளை மார்ச் 1ம் தேதி முதல் வரும் 20ம் தேதி வரை 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறஉள்ளது. இதனால் இச்சாலைகளை பயன்படுத்தி வருகிற இலகு ரக வாகனங்கள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கீழ்கண்டவாறு மாற்றுப் பாதையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.

அதன்படி, பாளை கேடிசி நகர் - சீனி வாசநகர் வழியாக சமாதானபுரம், பாளை பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள், மாற்றுப்பாதையாக பாளை கேடிசி நகர் சீனிவாசநகர் வழியாக அரசு சிறப்பு மருத்துவமனை, ஹைகிரவுண்ட் ரவுண்டானா வழியாக பாளை பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள் ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory