» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா போட்டி: சாயர்புரம் போப் கல்லூரி சாம்பியன்!

சனி 1, மார்ச் 2025 9:06:16 AM (IST)



பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி இயற்பியல்துறை மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. கல்லூரிக் கலையரங்கில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக முதுகலை இயற்பியல் மாணவர் அபூபக்கர் சித்திக் இறை வாழ்த்து ஓதினார். ஆராய்ச்சி மாணவி அனிஷா நஸ்ரின்,  வரவேற்புரை ஆற்றினார்.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கி உரை ஆற்றினார்.  கல்லூரி துணை முதல்வர் சையத் முகமது காஜா வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வில் இயற்பியல் துறைத் தலைவர் முகமது ரோஷன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இயற்பியல்துறை உதவிப் பேராசிரியர் அஸ்வீல்  ஜலீல் அஹமத், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கத்தின் மாநிலச்  செயற்குழு உறுப்பினர் கே. எழிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வானியலின் முக்கியத்துவத்தையும், அது அறிவியல் முன்னேற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் சுமார் 70 பேர் பங்கு பெற்றனர். இதில் டம்ப் சேரேட்ஸ், வினாடி வினா, மாதிரித்  தயாரிப்பு, விவாதம், வாய்வழி மற்றும் போஸ்டர் வழங்கல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன, இப்போட்டிகளில் சாயர்புரம் போப் கல்லூரி இயற்பியல்துறை மாணவர்கள் வினாடி-வினா போட்டியில் முதல் இடத்தையும், டம்ப் சேரேட்ஸ், போஸ்டர் வழங்கல் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். பாளை ஜான்ஸ் கல்லூரி இரண்டாம் இடம் பெற்றனர். நிறைவாக ஜீனத் பசீரா நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory