» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு

சனி 1, மார்ச் 2025 4:22:29 PM (IST)

கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில், செங்கோட்டை ரயில்களில் தற்காலிகமாக 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

வருகிற கோடை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக குறிப்பிட்ட ரயில்களில் 6 கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் இன்று(மார்ச் 1) முதல் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22682) வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயிலிலும் இன்று முதல் 19 ஜூலை வரை அதே 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு (வண்டி எண்: 22657) திங்கள், புதன், ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் மார்ச் 2 முதல் ஜூன் மாதம் 16 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டுகிறது.

அதே சமயம் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22658) திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயிலிலும் மார்ச் 3 முதல் 17 ஜூலை வரை அதேபோல் 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory