» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு: சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது

ஞாயிறு 9, மார்ச் 2025 7:18:06 PM (IST)

நெல்லையில் போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை போலீசார்  கைது செய்தனர்.

நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அமுதா ராணி. இவரது கணவர் வனராஜ் (55). இவர்கள் பாளை பெருமாள்புரம் பொதிகை நகரில் உள்ள தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனராஜ், 35 வயது பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் நெல்லையில் காவல்துறையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் நிலையில், அவர் தனது மனைவியை அழைத்துச்சென்று பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஏட்டு மனைவிக்கு, வனராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் மனைவிக்கு போலீசின் கணவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நெல்லை மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான வனராஜின் தந்தை பட்டாலியனில் இன்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory