» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மிக கனமழை எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!

திங்கள் 10, மார்ச் 2025 7:59:52 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை 11.03.2025 அன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.03.2025) நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை 11.03.2025 மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக கன மழையை எதிர்நோக்கி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மிக கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் தொலைபேசி எண்:0462-2501070 ஆகியவற்றை தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தங்களது கைபேசியில் தமிழக அரசின் TN Alert செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேற்படி செயலியினால், வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம். பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில் பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ செல்ல வேண்டாம். தண்ணீர் தேங்கிய இடங்களில் பொதுமக்கள் இறங்க வேண்டாம். துண்டித்து விழுந்த மின் கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள். அரசு தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.அனிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேம்ஸ், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சரவணன் மற்றும் அரசு அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory