» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்

செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)



இட்டமொழியில் பள்ளி மாணவி ஐ.மதுமிதா என்பவர், தனது தந்தை இறந்த சோகத்திலும் இன்று நடைபெறும் கணிதத் தேர்வு எழுத சென்றுள்ளார். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள விஜயச்சம்பாடு வடலிவிளை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (55). இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் மதுமிதா இட்டமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிஸஸ்-2 படித்து வருகிறார். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில் மதுமிதாவிற்கு இன்று பிளஸ்-2 கணிததேர்வு நடைபெற்றது. இதற்கிடையே தந்தை இறந்த நிலையிலும் தந்தையின் பூத உடலை வணங்கி விட்டு மாணவி மதுமிதா தனது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். தந்தை இறந்த சோகத்திலும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் மாணவியை பொதுமக்கள் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory