» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜியாக சந்தோஷி ஹதிமானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த பணியிட மாற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, நெல்லை டிஐஜியாக இருந்த டாக்டர். பா. மூர்த்தி, ஐபிஎஸ் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த அபினவ் குமார் ஐபிஎஸ், மதுரை மண்டல டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை காலியாக இருந்த சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு -1, துணை ஆணையராக, சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக இருந்துவந்த ஆர் சக்திவேல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், சென்னை காவல்துறையின் நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக டாக்டர். வி. பாஸ்கரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தோஷி ஹதிமானி ஐபிஎஸ் நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பு வகிப்பார் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory