» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் : ஆட்சியர் ஆணை வழங்கினார்!
புதன் 26, மார்ச் 2025 5:21:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் மட்டும் வரப்பெற்றதால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 9 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகள் 21.03.2025 அன்று வழங்கப்பட்டது.
மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 180 விண்ணப்பங்களுக்கான குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (திருநெல்வேலி) என்.ஆர்.சரவணன், மோட்டார் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் டி.ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)
