» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 6 புதிய கிளைகள் திறப்பு விழா
வியாழன் 27, மார்ச் 2025 8:14:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், திருப்பூர் மாவட்டம், தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் உட்பட 6 இடங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது), பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கியானது ஆறு புதிய கிளைகளை இன்று துவங்கி உள்ளது.

இதில் கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரியில் 573வது கிளையை Strategic Sourcing, Plant Engineering & Corporate Relations, Roots Group of Companies இயக்குநர் சந்திரசேகர் திறந்து வதை்தார். திருப்பூரில் 574வது புதிய கிளையை கிட்ஸ் கிளப் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் தலைவர் மோகன் கே. கார்த்திக் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு 575வது கிளையை தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம் தலைவர், திருப்பூர் எம் சுப்ரமணியம், புதிய கிளையை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 576வது கிளையை சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயலாளர் சக்தி திருக்குமரன் துவக்கி வைத்தார். தெலுங்கானா கரீம்நகரில் 577வது புதிய கிளையை மாவட்ட அரிசி ஆலைகள் நல சங்கம் தலைவர், போயின்பள்ளி நரசிங்க ராவ் காரு துவக்கி வைத்தார். உத்திரப் பிரதேசம் அயோத்யா நகரில் 578வது புதிய கிளையை சஹாரா பேக்கர்ஸ் இயக்குநர் ராஜீவ் குமார் மதன் துவக்கி வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல மேலாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.

புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உயர் சலீ S நாயர் விளக்கியதாவது: வங்கியானது இன்று ஆறு கிளைகளை ATM/CRM வசதியுடன் துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 578 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)

.N.Murugan of CHINNALAPATTI DINDIGUL DIST TN ...This is a very good bank for the customers. We have experienced their services.Mar 31, 2025 - 04:12:20 PM | Posted IP 172.7*****