» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு மையத்தில் ஆட்சியர் சுகுமார்ஆய்வு

வெள்ளி 28, மார்ச் 2025 12:51:06 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 23647 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஸ்ரீநித்தியகல்யாணசுந்தரி வெள்ளையன் செட்டியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (28.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. 94 தேர்வு மையங்களில் 93 அரசுப் பள்ளிகளும், 81 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 110 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளிருந்தும் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், சிறை கைதிகள் ஒரு தனித்தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 325 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

95 தேர்வு மையங்களில் 11,208 பள்ளி மாணவர்களும், 11,721 மாணவியர்களும், 718 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 23647 பேர் தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு பணிக்கு 95 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 101 துறை அலுவலர்கள், 1507 அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 1703 ஆசிரியர்களும், தேர்வினை கண்காணிக்க 147 பேர் நிலையான படையினராகவும், சிறப்பு பறக்கும் படை 7 குழுக்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆய்வில், இராதாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory