» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை : வாலிபர் போக்சோவில் கைது!

வெள்ளி 28, மார்ச் 2025 8:14:46 PM (IST)

நாங்குநேரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம், நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (23). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிளஸ் -1 மாணவியிடம் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து மாணவியிடம் சமூக வலைதளங்களில் பேசிவந்த சுந்தர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததையடுத்து அவர் கண்டித்துள்ளார். உடனே மாணவி வாலிபரிடம் பேசுவதை நிறுத்தினார். ஆனாலும் சுந்தர் மாணவியை தன்னிடம் பேசுமாறு தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். அடிக்கடி அந்த மாணவியை வழிமறித்து தன்னிடம் பேசுமாறு அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory