» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீஸ் ஏட்டு பலி!

வெள்ளி 28, மார்ச் 2025 8:22:39 PM (IST)

கூடங்குளம் அருகே மோட்டார் பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு உயிரிாந்தார். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா (38). இவர் கூடங்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை தனது சொந்த ஊரான மறுகால்குறிச்சியில் இருந்து தான் பணிபுரியும் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கூடங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் செல்லும்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் முத்தையா பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முத்தையாவின் உடலை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கூடங்குளம் போலீசார், முத்தையா உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory