» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தெற்கு பீச் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: மேயருக்கு திமுக கவுன்சிலர் கோரிக்கை!

சனி 29, மார்ச் 2025 11:56:20 AM (IST)

தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என 40-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜெ.ரிக்டா ஆர்தர் மச்சாது கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "40-வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு பீச் ரோடு மாதா கோயில் முன்பு அனைவரும் இரண்டு கடைகள் மற்றும் பந்தல் அமைத்தும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் அதிகமாக மாதா கோயிலுக்கு வரும்போது இந்தக் கடைகளில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது. 

10-அடி மெயின் ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கடை முன்பு விட்டு செல்கிறார்கள். இதனால் பழைய துறைமுகத்திற்கு செல்லும் லாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லத்திற்கு செல்லும் வழியும் இதுதான் எனவே இதனால் விபத்து நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.  மேலும் இதுவரை கடை உரிமையாளர்கள் மாநகராட்சியில் எந்த அனுமதியும் பெறவில்லை எனவே ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

மாதா கோவில் பகுதி மக்கள்Mar 29, 2025 - 02:44:33 PM | Posted IP 162.1*****

எங்கள் பகுதி கவுன்சிலர் கடைக்கு லஞ்சம் கேட்டு குடுக்காதலால் இவ்வாறு செய்திகளை பரப்பி வருகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory