» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு : ஏப்.1 முதல் 4வரை நேர்முகத் தேர்வு

ஞாயிறு 30, மார்ச் 2025 9:05:55 PM (IST)

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வியட்நாமைச் சேர்ந்த உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குகிறது. இங்கு ட்ரைனி பிரஷ்ஷர்ஸ் பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவுகளில் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளில்  ஹரியர் இல்லாமல் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலர்க்கும் வேலை வாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது .

கல்வித் தகுதி டிப்ளோமா மெக்கானிக்கல்  &   ஆட்டோமொபைல். வயது : 18 முதல் 25 வரை. சம்பளம் ரூ.20,000 மற்றும் பிற சலுகைகள். நேர்காணல் நடக்கும் இடம் "வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட்,  பிளாட் நம்பர் B - 1 / 11., சிப்காட் தொழில் பூங்கா, ஓட்டப்பிடாரம், சில்லாநத்தம், தூத்துக்குடி. நேர்காணல் நடக்கும் நாள் நேரம் : ஏப்.1 முதல் 4வரை காலை 8:30 மணி முதல் நடைபெறும். மேலும் 9962362244 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 


மக்கள் கருத்து

PonrajuMar 31, 2025 - 12:12:43 PM | Posted IP 104.2*****

This is fake news as per Vin fast Project head statement.

வேலை இல்லாத அப்பாவிMar 30, 2025 - 10:03:41 PM | Posted IP 162.1*****

முதலை அமைச்சர் கூறுவது வின் பாஸ்ட் தொழிற்சாலைகளால் அனைவர்க்கும் வேலை கிடைக்குமாம் நம்பினோம், ஆனால் விளம்பரத்துல 2021, 2022, 2023 & 2024 இல் தேர்ச்சி பெற்றவங்களுக்கும் மட்டும் வேலை வாய்ப்பாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory