» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில்பட்டியில் புதிய இலக்கிய சாரல் தமிழ் தொண்டு நிறுவனம் தொடக்கம்!

திங்கள் 31, மார்ச் 2025 7:43:22 PM (IST)



கோவில்பட்டி சகாராவை தாண்டாத ஒட்டகம், முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் 'இலக்கியச் சாரல்' என்ற தமிழ்த் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. 

தொடங்கிய முதல் நிகழ்வாக மக்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டுவது ஐம்பெருங்காப்பியங்களா ? ஐஞ்சிறு காப்பியங்களா? என்ற பட்டிமன்றம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் நடந்தது. அகுபஞ்சர் மருத்துவர் சேதுராமன் தலைமை தாங்கினார்.கோவில்பட்டி இசை எஃப் எம் இயக்குநர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பட்டிமன்ற தலைவராகவும் நடுவராக தமிழ்ச் செம்மல் இரா.ராசு தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.

பேச்சாளர்களாக எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி, ஆசிரியை கண்ணகி, தேசிய நல்லாசிரியை விநாயக சுந்தரி, தமிழ்ப்பணிச் செம்மல் பிரபு, முனைவர் முருகசரஸ்வதி, ஆசிரியை தங்கத்துரையரசி மற்றும் வரகவி நல்லாசிரியர் மா‌. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன், கழுகுமலை திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் பொன்ராஜ் பாண்டியன் மற்றும் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

Smart KovilpattiMar 31, 2025 - 10:20:06 PM | Posted IP 162.1*****

அருமை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory