» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு என வதந்தி : இளைஞர்கள் ஏமாற்றம்!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:37:13 AM (IST)



தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு என்று வெளியான வதந்தியால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் சில்லாநத்தம் சிப்காட் பகுதியில்  வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், 408 ஏக்கர் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள்  அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜூன் மாதத்தில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், வின்பாஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து தூத்துக்குடி மட்டுமின்றி சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று குவிந்தனர். ஆனால் அங்கு ஆள் எடுக்கும் பணி எதுவும் நடைவெறவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இது வதந்தி என்று தெரியவந்துள்ளதால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

அப்போApr 2, 2025 - 09:57:50 AM | Posted IP 172.7*****

TUTYONLINE ல வந்த செய்தியும் பொய்யா ?

KANNANApr 1, 2025 - 07:40:44 PM | Posted IP 172.7*****

EMATRAM NO.1 (SAME AS COPPER CO.)

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory