» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் வீட்டில் 8 அடி உயர கஞ்சா செடி வளர்ப்பு : போலீஸ் விசாரணை!
புதன் 2, ஏப்ரல் 2025 5:53:56 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு மூலிகைச் செடிகள் இடையே வளர்ந்த 8 அடி உயர கஞ்சா செடியை போலீசார் வேருடன் பிடுங்கி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆவுடையார்புரம் பகுதியில் அன்புராஜ் என்பவர் தனது வீட்டின் முன்புறம் பல்வேறு மூலிகை செடிகள் வளர்ந்து வருகின்றார். இதன் இடையே ஆள் உயர கஞ்சா செடி ஒன்று வளர்ந்து உள்ளது. இந்த செடி கஞ்சா செடி என்று தெரியாமலேயே மலை வேம்பு என்று நினைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தாராம்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்று கட்டிட வேலைக்கு வந்து சிலர் வளர்ந்து இருப்பது கஞ்சா செடி என காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய பாகம் காவல்துறையினர் அந்த செடியை சோதனை செய்ததில் அது கஞ்சா செடி என தெரியவந்தது. மேலும் இந்த கஞ்சா செடி சுமார் 8 அடி உயரம் வரை வளர்ந்து இருந்தது.
இதைத் தொடர்ந்து கஞ்சா செடியை காவல்துறையினர் வேரோடு பிடுங்கி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து கஞ்சா செடி எத்தனை கிலோ என்பது எடை போட்டு தெரியவந்த பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். மூலிகைச் செடியுடன் 8 அடி உயர கஞ்சா செடி வளர்ந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
அந்தோணிசாமிApr 3, 2025 - 08:50:21 AM | Posted IP 172.7*****
இந்த கஞ்சா செடிக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் மொட்ட தலைக்கு முழங்காலுக்கு முடிச்சு போட்ட மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து இன்னா திராவிட முதல் உக்காந்தா திராவிட மடல் என்று குறை கூறும் நண்பரே வேற ஏதாவது விஷயம் இருந்தால் சொல்லுங்கள்
யப்பாApr 2, 2025 - 06:44:03 PM | Posted IP 162.1*****
திராவிட அப்பா ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம்
மேலும் தொடரும் செய்திகள்

கனமழை : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:23:32 PM (IST)

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:19:01 PM (IST)

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:07:27 AM (IST)

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:09:33 PM (IST)

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

அந்தோணிசாமி அவர்களேApr 3, 2025 - 01:10:59 PM | Posted IP 162.1*****