» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றம்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 10:52:32 AM (IST)
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவார் முத்தமிழ் அரசன். இவர் மீது பல்வேறு புகார்கள் எதிரொலியாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணி அமர்த்தபட்டார். இதற்கிடையே வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே தென்பாகம் காவல் நிலையத்தில் பணி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை அவர் தாக்கியதாகவும், அதனால் அந்த வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
தமிழன்Apr 14, 2025 - 01:26:40 PM | Posted IP 104.2*****
மொத்தத்தில் நேர்மையான அதிகாரிகளை நல்லவர்களாக இருக்கவிடுவதில்லை
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

வழக்கறிஞர்கள்Apr 16, 2025 - 06:58:49 PM | Posted IP 172.7*****