» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இன்ஸ்டாகிராமில் மோதலை தூண்டும் வீடியோ பதிவு: நெல்லை வாலிபர் கைது

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:00:35 PM (IST)

இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்ட நெல்லை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான், பருத்திகுளம், காலணி தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜ்குமார் (30) என்பவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். 

இதுகுறித்து கங்கைகொண்டான் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து கங்கைகொண்டான் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory