» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)
நெல்லை அருகே கோவிலில் சாமியாடிய பக்தர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற மாடசாமி (55). இவர் அந்த பகுதியில் உள்ள சப்பாணி மாடசாமி கோவிலில் சாமியாடி வந்தார். நேற்று முன்தினம் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற பூஜையின்போது மாடசாமி சாமியாடினார். பின்னர் அவர் கோவிலில் இருந்து மயான வேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
மயான வேட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவிலுக்கு திரும்பிய மாடசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர், பக்தர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாடசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சென்று, மாடசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடசாமி ரத்த அழுத்த பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

