» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சிவப்பு சாத்தி நடராஜப் பெருமான் ரத வீதி உலா!
புதன் 7, மே 2025 10:00:10 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் 7ஆம் நாளான இன்று மாலை நடராஜப் பெருமான் சிவப்பு சாத்தி பித்தளை சப்பரத்தில் ரதவீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 7ஆம் நாளான இன்று காலை 7.35 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் உருகு சட்ட சேவை, 8.00 மணிக்கு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் ரத வீதி உலா நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் கும்பாபிஷேகம், 10.30மணிக்கு நடராஜப் பெருமான் மாடவீதி சுற்றி தெப்பக்குளம் அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகர் கோயில் விழா மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இரவு 7.00 மணிக்கு சிகப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளினர். பின்னர் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்கப் பல்லக்கில் அருள்மிகு சோமாஸ்கந்தர் - பாகம்பிரியாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 27, அக்டோபர் 2025 8:51:28 AM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)





Rajaமே 8, 2025 - 03:27:51 PM | Posted IP 104.2*****