» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பலசரக்கு கடை அதிபர் கடத்தி கொலை : கோவில் தகராறில் பயங்கரம்
வியாழன் 8, மே 2025 8:50:25 PM (IST)
தூத்துக்குடியில் கோவில் தகராறில் பலசரக்கு கடை அதிபரை கடத்தி சென்று கொலை செய்த 3பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி குருவித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பொங்கல்ராஜ் (43) இவருக்கு திருமணம் ஆகி முத்துக்கனி என்ற மனைவியும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். பொங்கல்ராஜ் முத்தையாபுரம் சுந்தர் நகரில் காய்கனி மற்றும் பலசரக்கு கடைவியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு இவர் 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதைத் தொடர்ந்து அவரது மகன் சக்திவேல் (24) தந்தையை முத்தையாபுரம் கடைக்கு வந்து தேடினார். அவரை கண்டுபிடிக்க முடியாதால் இன்று காலை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு மதிகெட்டான் ஓடை பாலத்தின் கீழ் அவரது பைக் கிடந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் தேடிப்பார்த்தபோது மதிக்கெட்டான் ஓடையில் பொங்கல்ராஜ் ரத்தாக் காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முக்காணி குருவித்துறையைச் சேர்ந்த மாசாண முத்து மகன் புலமாட முத்து (32), மாரிமுத்து மகன் நாகராஜன் (19), சங்கர் மகன் ஜெயராஜ் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து பொங்கல் ராஜை கொலை செய்து உடலை ஓடைக்குள் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
மேலும் தீவிர விசாரணையில் ஆத்தூர் முக்காணி தாமிரபரணி ஆற்றின் கரையில் புலமாடசாமி சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில கொலை செய்யப்பட்ட பொங்கல்ராஜ் தர்மகர்த்தாவும், அவரது அண்ணன் நாராயணன் என்பவர் பூசாரியாக இருந்து வந்தார். கோவிலில் சாமியாடியாக மாசான முத்துமகன் ராஜேஷ் என்பவர் இருந்து வந்தார்.
கோயிலின் நிர்வாகமனாது முத்துராஜ மகன் சிவகுமார் என்பவர் பொறுப்பில் இருந்து வந்தது. நாராயணன், சிவகுமார் ஆகியோர் முத்தையாபுரத்தில் வசித்து வந்ததால், முக்கானி கிராமத்தில் உள்ள அவருடைய சகோதரர் பொங்கல்ராஜ் கோயில் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கோவிலில் வளாகச் சுவருக்கு அருகில் தனது முன்னோர்களின் கல்லறை உள்ளது என்றும், கடந்த காலங்களில் சுமார் 4 தலைமுறைகளாக தன்னுடைய குடும்பத்தினரே பூஜை செய்து வருவதாலும் கோவில் தனது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் பாத்தியப்பட்டது என்று நாராயணன் தெரிவித்து வந்தார்.
கடந்தாண்டு (2024) புரட்டாசி மாதம் கோவில் கொடை விழா நடைபெற்று முடிந்தது. கோவில் கொடை விழா முடிவற்றதும் கோவில் வரவு செலவு கணக்குகள் முறையாக காண்பிக்கப்படவில்லை என்று ஊர் தரப்பைச் சேர்ந்த மாசான முத்து, புலமாடன், சங்கர் மற்றும் வரி செலுத்துபவர்கள் தரப்பினர் வரவு செலவு கணக்கை முறையாக சமர்ப்பிக்கவும் என பொங்கல்ராஜ் தரப்பினரிடம் கேட்டபோது புலமாடசாமி கோயில் எங்களது குடும்பத்திற்கு பாத்தியப்பட்டது என்றும் யாருக்கும் கணக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதன் பேரில் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த முன்விரோத்தில் கொலை நடந்துள்ளது. கொலை வழக்கு சம்பந்தமாக புலமாடசாமி, நாகராஜன், ஜெயராஜ் ஆகிய 3பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தையொட்டி முக்காணி கிராமத்தில் பதற்றும் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)



சட்டம்மே 9, 2025 - 09:49:06 AM | Posted IP 104.2*****