» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்!

செவ்வாய் 17, ஜூன் 2025 8:20:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நாளை (ஜூன் 18) புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (18.06.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

naan thaanJun 18, 2025 - 03:53:12 PM | Posted IP 104.2*****

ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி திரு.ஜெயராமன் அவர்கள் எம்.எல்.ஏ திரு. பூவை ஜெகன்மூர்த்தி, முன்னாள் எஸ்ஐ திருமதி. மகேஸ்வரி, வழக்கறிஞர் திரு.சரத் குமார், திரு.பிரபாகரன் போன்ற சான்றோருக்காக காவல்துறை வாகனத்தை ஆள்கடத்தலுக்கு உள்வாடகைக்கு விடுவதாக சொல்கிறார்களே .. அது குறித்து உங்கள் கருத்து தெரிவிக்கலாம் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory