» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு

செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)



அம்பாசமுத்திரம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கீழபாப்பான்குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 29 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் குடியிருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

கல்லிடைக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பதிவேடுகள், போதுமான மருந்துகள் இருப்பு, அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வெள்ளாங்குளி பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளையும் காலதாமதம் இல்லாமல் விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வைகுண்டம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கண்ணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory