» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)
நெல்லை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை அருகே பிராஞ்சேரி ஆதிதிராவிடர் கீழ தெருவைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன். இவருடைய மகன் சீதாராமன் (31). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ்-1 மாணவியை ஆசைவார்த்தை கூறி பஸ்சில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குப்பதிவு செய்து சீதாராமனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட சீதாராமன் பள்ளி மாணவியை கடத்தியது மட்டும் நிரூபிக்கப்பட்டதால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிபதி உஷா ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
