» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காவலர் பலி : தூத்துக்குடி அருகே சோகம்
வியாழன் 19, ஜூன் 2025 10:15:38 AM (IST)
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் பாளையங்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவில் பாலத்தில் இருள் சூழ்ந்திருந்த வேளையில் ஆங்காங்கே கிடந்த பேரிகார்டுகளை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.
முறப்பநாடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் தென்காசி மாவட்டம், ஆலங்குளம், முத்துகிருஷ்ணபேரி காமராஜர் நகரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சங்கர் குமார் (31) என்பவர் பேரிகார்டுகளை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் தடுப்புச் சுவரில் கை வைத்த போது, பேலன்ஸ் கிடைக்காமல் எதிர்பாராத விதமாக, ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து மற்ற காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி சுகீர் மற்றும் போலீசார் பார்வையிட்டனர் மேலும் பலியான போலீஸ்காரர் சங்கர்குமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த காவலருக்கு சௌமியா என்ற மனைவியும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

M BabuJun 20, 2025 - 08:00:32 AM | Posted IP 172.7*****