» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் : தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!!
வியாழன் 19, ஜூன் 2025 8:38:26 PM (IST)

தூத்துக்குடியில் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மூன்றாம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளராக பணிபுரியும் பிரேம்குமார் என்பவரை அரசு பணி செய்தமைக்காக அவருக்கு அலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் அவரது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உயிர் பாதுகாப்பும் அவருக்கு பணி பாதுகாப்பு வழங்கிட கோரியும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சோ.மகேந்திரபிரபு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெ.உமாதேவி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மேனாள் மாநில பொதுச்செயலாளர் என்.வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில துணைத் தலைவர் தே.முருகன் வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் த.நா.தொ.துறை. சார்நிலை அலுவலர்கள் சங்கம் ம.கார்த்திகேயன் நிறைவுரை ஆற்றினார். மா. இ.செ சாம் டேனியல் நன்றியுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறை தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
பிரேம்Jun 21, 2025 - 09:37:20 AM | Posted IP 172.7*****
பிரேம் குமார் என்னுடைய பெயரில் ஒரு அரசு அதிகாரி . இவரை பாதுகாக்கும் விதமாக வேறு மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து அவரை பாதுகாக்க வேண்டும். கொலை மிரட்டல் வரும் அலவிற்கு இவர் நியாயமானவர் இல்லை.எனது தந்தையிடம் வருட விடுமுறை தகவல் இல்லை என கூறி ரூபாய் 2,500/-யை எவ்வித ரசீது இல்லாமல் என் தந்தையை மிரட்டும் தோரணையில் பணத்தை பிடிங்கி சென்றவர் தான். இது போன்ற நியாயம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் துணை நிற்பது அருவருப்பாக உள்ளது.
PrinceJun 20, 2025 - 07:28:17 PM | Posted IP 172.7*****
இந்தப் பிரேம்குமார் பல வருடங்களாக தூத்துக்குடியில் உள்ளார். பலமுறை என்னிடமே பணம் வாங்கியுள்ளார். இவருக்கு கொலை மிரட்டல் விடுவதற்கு காரணம் இவர் ஒரே ஊரில் வேலை செய்வதுதான். அரசு அதிகாரிகளை வருடத்திற்கு ஒரு முறையாவது மாற்றி வேறு ஊரில் அனுப்ப வேண்டும் இல்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் மேலும் நடை பெற்றுக் கொண்டே இருக்கும். அதிகாரிகளை ஒரே ஊரில் மீண்டும் மீண்டும் பணியமர்த்துவது இது போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளுக்கு வலியுறுக்கின்றன
Ravi kumarJun 20, 2025 - 07:24:28 PM | Posted IP 172.7*****
தராசுக்கு முத்திரை இருக்கா இல்லையா என்று பார்க்கிறேன் என்று சொல்லி பணத்தை திருடும் திருடர் . பிரேம்குமார் இவர் என்னிடமும் ரூபாய் 2000 வாங்கி உள்ளார் ஆனால் தராசையும் தரவில்லை முத்திரை வைத்தும் தரவில்லை. ரசீது கேட்டால் இன்னும் தரவில்லை. என் தராசை எடுத்துச் சென்று 11 மாதங்கள் ஆகின்றன. இவ்வாறு உள்ள அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்தியன்Jun 20, 2025 - 02:13:32 PM | Posted IP 162.1*****
அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது.பத்து ரூபாய் கூட கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக அரசு ஊழியர் பிடிபட்டால் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.
VijayJun 19, 2025 - 09:29:23 PM | Posted IP 172.7*****
இந்த பிரேம் குமார் என்னிடமே 3,000 ரூபாய் மிரட்டி வாங்கியவர் தான்..
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

GuruJun 21, 2025 - 09:40:35 AM | Posted IP 162.1*****