» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 24, ஜூன் 2025 3:44:18 PM (IST)

இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும், டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்த நபர்களுக்கு இந்திய அரசின் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

மேலும் இவ்விருதிற்கு தகுதியான நபர்கள் (https://awards.gov.in) இணையத்தளத்தில் விண்ணப்பித்து, அவ்விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 30.06.2025 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டு அரங்கம், சென் தாமஸ் சாலை, பாளையங்கோட்டை என்ற முகவரியில் அலுவலக நாட்களில் நேரில் வந்து சமர்பித்திட வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory