» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் : கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 4:13:05 PM (IST)
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு, மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000/- மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான சான்றுகள்: இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்கண்ட சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். (பிறப்பிடச் சான்று)வயது வரம்பு – 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று, திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.(வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்).
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்கள் 23.06.2025 முதல் 14.07.2025-ற்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், ஸ்ரீ சக்திநகர், தென்காசி என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)
