» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேரன்மகாதேவியில் போலீஸ் - பொதுமக்கள் நட்புறவு விழிப்புணர்வு கூட்டம்!
புதன் 25, ஜூன் 2025 10:25:15 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நட்புறவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுபடி சேரன்மகாதேவி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் ஆலோசனைப்படி முன்னீர் பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையில் சுப்ரமணியபுரம் கிராமத்தில் பொதுமக்கள் காவல்துறை இடையேயான கூட்டம் நடைபெற்றது.
சுப்ரமணியபுரம் கிராம சமூக ஆர்வலர்கள் ஏ.சி. துறை மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பொதுமக்களுக்கு இடையே நட்புறவையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் பேசினார்
பின்னர் சுப்பிரமணியபுரத்தில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்களை 2 மாணவிகளுக்கும். பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 3 மாணவ மாணவிகளுக்கும் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும்போதைப் பொருள்களுக்கு அடிமையாக மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
