» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை: மத்தியக் குழுவினர் ஆய்வு!
புதன் 25, ஜூன் 2025 4:21:37 PM (IST)
களக்காடு- முண்டந்துறை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இங்கு ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் தேயிலை தோட்டங்கள் 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த தேயிலை தோட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், மாஞ்சோலை வனப்பகுதியின் குத்தகை வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி அந்நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிலும் தொழிலாளர்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து களக்காடு- முண்டந்துறை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள மத்தியக்குழுவினர், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உயர்மட்டக் குழுவின் தலைவர் சித்தாந்த தாஸ் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளின் தற்போதைய நிலை என்ன? இந்த பகுதியின் மொத்தப்பரப்பளவு, இதற்குரிய சாலை வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதனை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டவுடன் யார், யாரை வனப்பகுதிக்குள் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி செயல்பாட்டிற்கு வரும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
