» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நயினார்குளம் பிரிவு கால்வாய் தூர்வாரும் பணி : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
புதன் 25, ஜூன் 2025 4:53:15 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நயினார்குளம் பிரிவு கால்வாயில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் பகுதியில் 2 மீட்டர் ஆழத்திற்கு குப்பை மற்றும் கட்டட கழிவுகள் அகற்றும் பணி 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டர் நீர்வளத்துறையின் மூலமும், 200 மீட்டர் எக்ஸ் நோரா தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்து அடுத்த வாரம் இறுதிக்குள் நிறைவடையும். அகற்றப்பட்ட கழிவுகள் அனைத்தும் 4 கிலோ மீட்டருக்கு வெளியில் சென்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், தாமிரபரணி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
