» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் என்று வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் அ.பா.தேவேந்திர பூபதி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் அ.பா.தேவேந்திர பூபதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அவர தெரிவித்ததாவது: வணிகப் பெருமக்களின் நலனுக்காக "தமிழ்நாடு வணிகர் நலவாரியம்” என்ற அமைப்பு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட வாரியத்தில் 20 அலுவல்சாரா உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது வளர்ந்து வரும் வணிகத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அவர்களால் அலுவல்சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கை 20-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
மேலும், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண்டாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும். இவ்வாரியத்தில் மூலம் குடும்பநலத்திட்டம், தீ விபத்து, திருமண உதவி, விபத்துக்கால உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, உறுப்பினரின் வாரிசுகளுக்கு விளையாட்டு நிதியுதவி, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் ஆண்டிற்கு விற்றுமுதல் (Turnover) ரூ.40 இலட்சத்திற்கு குறைவாக உள்ள வணிகர்களுக்கு 01.06.2025 முதல் 30.11.2025 வரை கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இன்றையதினம் வணிக நல அமைப்பினர், வணிகர் நல பேரவை, சிறு, குறு வணிகர் பேரவைகளை சார்ந்த வணிகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும், தகவலுக்கு மேலாளர், துணை மாநில வரி அலுவலர்கள், இணை ஆணையர் (மா.வ) அலுவலகம் (759805963), திருநெல்வேலி துணை ஆணையர் (மா.வ) அலுவலகம் (9487172966) தொடர்புக்கொள்ளலாம் என வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் அ.பா.தேவேந்திர பூபதி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இணை ஆணையர் (மா.வ) திருநெல்வேலி கோட்டம் ப.முருகக்குமார் , துணை ஆணையர் (மா.வ) (மு.கூ.பொ) ஜெ.கவிதா , இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கோ.கோபிரஞ்சித் , வணிக நல அமைப்பினர், வணிகர் நல பேரவை, சிறு, குறு வணிகர் பேரவைகளை சார்ந்த வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

நெல்லை பல்கலை. மாணவர்களிடையே மோதல்: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 3:27:16 PM (IST)

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:53:18 AM (IST)

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:07:51 AM (IST)

சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டுத்தரகருக்கு 25 ஆண்டு சிறை : நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:24:57 AM (IST)
