» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)
ஆலங்குளத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (30). இவர் ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா எஸ்தர் (27). இவர்களுக்கு 3 மகள்களும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
ஸ்டெல்லா எஸ்தரின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஒரு குறுந்தகவல் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிந்து கொண்டார். அதில் வந்த லிங்க் மூலம் கடந்த மாதம் ஆன்லைனில் விளையாட தொடங்கினார். முதலில் சிறிது பணம் ஆன்லைன் நிறுவனம் மூலம் ஸ்டெல்லா எஸ்தர் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.
இதனால் ஆன்லைன் மூலம் வரும் பணத்தை கொண்டு வீட்டு கடனை எளிதாக கட்டிவிடலாம் என்ற ஆசையில் தனக்கு தெரிந்த சிலரிடம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அதில் பெரிய அளவில் பணம் வராததால் ஏமாற்றம் அடைந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினர். இதனால் குடும்பத்தில் தகராறும் ஏற்பட்டது.
பணத்தை இழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட ஸ்டெல்லா எஸ்தர் கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் தனது தாய் வீட்டிற்கு சென்றார். குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்றார். அங்கு வயலுக்கு தெளிக்கக்கூடிய பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயை இழந்த 4 குழந்தைகளும் பரிதவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

