» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ரூ.2.53 கோடி நலத்திட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வெ.ஆறுச்சாமி வழங்கினார்
வியாழன் 31, ஜூலை 2025 4:57:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.2.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினார்.
தமிழ்நாடு அதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரியம் உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.07.2025) தமிழ்நாடு அதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரியம் உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி , மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில், துணை மேயர் கே.ஆர்.ராஜூ , தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் துணைத்தலைவர் செ.கனிமொழி பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்ததாவது:தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் 1974-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வாரியம் விரிவுப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. மீண்டும் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தூய்மைப் பணியாளர்களுக்கான வாரியத்தினை சிறப்பாக செயல்படுத்தி, தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென்ற உன்னத நோக்கில் நலவாரியத்திற்காக தனியாக அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, நலவாரியத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, வருடத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது வாரியத்தின் கையிருப்பாக ரூ.40 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வாரியத்திடம் உள்ளது. இப்பணம் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் தூய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பணியிடத்தில் விபத்து, மரணம் உறுப்புகளை இழத்தால், சரிசெய்ய இயலாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டால் இழப்புத்தொகையாக ரு.5 இலட்சமும், ஒரு கை, ஒரு காலினை இழந்தாலோ, ஒரு கண் முழுவதும் சரி செய்ய முடியாத அளவுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டலோ ரூ.1 இலட்சமும், இயற்கை மரண தொகை ரூ.20,000/மும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5000 என விபத்துக்காப்பீடு வழங்கப்படும். தூய்மை பணியாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இயற்கை மரண உதவித்தொகை ரூ.20,000/-, ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5000/, கல்வி உதவித்தொகையாக 10 வகுப்பு படிப்பதற்கு (பெண்களுக்கு மட்டும்), 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 11ம்வகுப்பு படித்துவரும் (பெண்களுக்கு மட்டும்) ரூ.1000, 12ம் வகுப்பு படித்தும் வரும் (பெண்களுக்கு மட்டும்), 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், முறையான பட்ட மேற்படிப்பு உள்ளிட்டவைகளுக்கு ரூ.1500/-மும், விடுதியில் தங்கி படித்தால் ரூ.1750/-மும், முறையான பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.4000/-மும், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ.5000/-மும், தொழில் நுட்ப பட்டப்படிப்பு ரூ.4000/-மும், விடுதியில் தங்கி படித்தால் ரூ.6000/-மும், தொழில் நுட்ப பட்டமேற்படிப்பு ரூ.6000/-மும், விடுதியில் தங்கி படித்தல் ரூ.8000/-மும், ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு ரூ.1000/-மும், விடுதியில் தங்கி படித்தால் ரூ.1200/-மும் வழங்கப்படும். திருமண உதவித்தொகை தொழிலாளர் (அ) மகன் (அ) மகள் குடும்பத்திற்கு இருமுறை மட்டும் ஆண் எனில் ரூ.3,000/-மும், பெண் எனில் ரூ.5000/-மும், மகப்பேறு உதவி ரூ.3000/-மும், கருச்சிதைவு அல்லது கருகலைப்பு ரூ.6000/-மும், கண் கண்ணாடி உதவி ரூ.500/-மும், முதியோர் ஓய்வு ஊதியம் ரூ.1000/-மும் வழங்கப்படும். எனவே தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து, நலத்திட்டங்களை பெற கேட்டுக்கொள்கிறேன்.
இன்றையதினம் 50 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டைகள் மற்றும் 50 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், இறப்பு உதவித்தொகை ரூ.25 ஆயிரம், கல்வி உதவித்தொகை ரூ.2 ஆயிரம், தொழில் முனைவோருக்கான திட்டத்தில் CM –Arise –ல் ஒருவருக்கு தாட்கோ மானியம் மூலம் ரூ.1,47,137/- மூலம் பயணியர் ஆட்டோ ஆக மொத்தம் ரூ.2.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நீங்கள் சம்பள உயர்வு மற்றும் சொந்த வீட்டுவசதி கேட்டுள்ளீர்கள். உங்களின் கோரிக்கைகள் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நீங்கள் பாதுகாப்பாகவும், பாதுகாப்பு உபகரணங்களுடன் உங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு பாதுகாப்பு இயந்திரங்கள் வழங்கப்படும். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தரப்படும் என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் 204 வட்டார மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 4000 தற்காலிக தூய்மைப்பணியாளர்களுக்கு (மஞ்சள் நிற) நலவாரிய அட்டைகளும், ஸ்மார்ட் கார்டாக 1615 உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 551 நபருக்கு ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் 28 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரணம், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப்பணியாளர்களுக்கு மேற்கண்டவாறு பலன்கள் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரியத்தின் application.tncwwb.com என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்வதினால் உங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், நலத்திட்ட உதவிகளும் விரைந்து பெற்றுக்கொள்ளலாம்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அம்முகாம்களில் மருத்துவ பரிசோதனை முகாமும் நடைபெறுகிறது. தூய்மை பணியாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவறாது பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வரும் 2-ஆம் தேதி முதல் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. இம்முகாம்களிலும் உயர் சிகிச்சைக்கான மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்வார்கள். நீங்கள் கடுமையாக உழைப்பவர்கள் கண்டிப்பாக இம்முகாம்களில் பங்கேற்று தங்களது உடல்நிலையை பரிசோதித்து கொள்ள வேண்டும். அதுபோன்று நீங்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அட்டை இல்லாதவர்கள் முகாமிற்கு சென்று விண்ணப்பித்து மருத்துவ காப்பீட்டு அட்டையினை பெற்றுக்கொள்ள வேண்டும். காப்பீட்டு அட்டை இருந்தால் தான் உயர்சிகிச்சை பெறுவதற்கு வசதியாக இருக்கும். மேலும், பணிகள் மேற்கொள்ளும் போது பாதுகாப்பு உபகரணங்களுடன் உங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தலைமை செயல் அலுவலர் கோவிந்தராஜ், (ஓய்வு), தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மாநில உறுப்பினர்கள் பூ.மூக்கையா , விஜய் சங்கர் , மாவட்ட மேலாளர் (தாட்கோ) சுதா , மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி , உதவி இயக்குநர்கள் வில்லியம் ஜேசுதாஸ் (பேரூராட்சிகள்), முகமது ஷபி (ஊராட்சிகள்), மாவட்ட வாரிய உறுப்பினர் முனியாண்டி , உதவி மேலாளர் (தாட்கோ) சுந்தரராஜன் உட்பட அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடித்தபசு விழா : தென்காசி மாவட்டத்திற்கு ஆக.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சனி 2, ஆகஸ்ட் 2025 5:12:36 PM (IST)

நெல்லை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்பில் சேதம்!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:48:24 PM (IST)

சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பதிவுகள்: நெல்லையில் 82பேர் கைது!
சனி 2, ஆகஸ்ட் 2025 3:52:54 PM (IST)

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: பயணிகள் சாலை மறியல்; நெல்லையில் பரபரப்பு!
சனி 2, ஆகஸ்ட் 2025 12:04:56 PM (IST)

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட நெல்லை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி காலமானார்!
சனி 2, ஆகஸ்ட் 2025 8:39:28 AM (IST)

ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் அவசியம்: ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:11:09 PM (IST)
