» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட நெல்லை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி காலமானார்!

சனி 2, ஆகஸ்ட் 2025 8:39:28 AM (IST)

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகரில் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட நெல்லை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி நேற்று (ஆகஸ்ட் 1) மதியம் மாரடைப்பால் காலமானார்.

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர். சிறந்ததொரு கல்வியாளர் வசந்திதேவி என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் வசந்தி தேவி. கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர பாடுபட்டுள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்தவர் வசந்தி தேவி. சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர். சிறந்ததொரு கல்வியாளர் வசந்திதேவி என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் வசந்தி தேவி. கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர பாடுபட்டுள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்தவர் வசந்தி தேவி. சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.
 
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார். 1973ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் கல்வியாளர் வசந்தி தேவி. 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி ; 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பொறுப்பு வகித்தார்.

1992-1998 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இந்திய வளர்ச்சிக்கான சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

வசந்தி தேவி பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தம் என்கிற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1973 ஆம் ஆண்டு பதம் விபூஷன் விருது பெற்றவர். வசந்தி தேவிக்கு 2017 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருது வழங்கப்பட்டது. நேற்றைய தினம் மாரடைப்பால் காலமான வசந்தி தேவியின் உடல் சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory