» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா கோலாகலம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:07:35 PM (IST)

திருநெல்வேலியில் பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிலையமான கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் பிரபலமான ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஜவுளி மற்றும் தங்க நகை வியாபாரம் செய்து வரும் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் திருவனந்தபுரம் சாலையில் நவீன கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. ஏரல் ராமகிருஷ்ண நாடார் பாத்திரக் கடை உரிமையாளர்கள் சோமு, நாதன் ஆகியோர் புதிய கிளையை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து ஜவுளிகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி, தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி, வைரம் கேரட்டிற்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளிப் பொருள்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. இந்தச் சலுகை செப்.4 முதல் 7ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

தரைத்தளம் மற்றும் 3 மேல் தளங்களில், ஜவுளிக் கடையுடன், தங்கநகை மாளிகையும் ஒருங்கே அமைந்துள்ளது. தரைத்தளத்தில் ஜுவல்லரி, சேலை ரகங்கள், மேட்சிங், முதல் தளத்தில் பட்டுச் சேலைகள், பேன்ஸி சேலைகள், இரண்டாம் தளத்தில் பெண் குழந்தைகள், மகளிர் ரெடிமேட்ஸ், மூன்றாம் தளத்தில் ஆண் குழந்தைகள் ரெடிமேட்ஸ், ஆண்கள் ரெடிமேட்ஸ் ரகங்கள் சர்டிங் சூட்டிங் ரகங்கள், வேஷ்டி, லுங்கி, டவல், பெட்ஷீட் ரகங்கள் இடம்பெற்றுள்ளன.
விழா ஏற்பாடுகளை கே.சின்னத்துரை அன் கோ பங்குதாரர்கள் சி.செல்வராஜ், சி.திருமணி, கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:27:07 PM (IST)

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு : பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து சபாநாயகர் மரியாதை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:43:11 AM (IST)

நெல்லை திருமண்டல தேர்தலை உடனே நடத்த வேண்டும்: முன்னாள் லே செயலர் வேதநாயகம் வலியுறுத்தல்
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:28:27 AM (IST)

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)
