» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து சபாநாயகர் மரியாதை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:43:11 AM (IST)

திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 154-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆகியோர் முன்னிலையில் இன்று (05.09.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் இந்திய அளவில் பேசப்படுகின்ற தலைவர் இந்த மன்னின் மைந்தர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் . தனது வாழ்நாள் முழுவதும் சுயமரியாதயை இழக்காதவர்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் வீழ்த்திட ‘சுதேசி நேவிகேஷன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்கினார் அதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று புகழ்ப் பெற்றார். அவருடைய தியாகத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் கல்வி பாடப்புத்தகங்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெறசெய்து தமிழ்நாடு அரசு அன்னாரது அவர்களுக்கு புகழ் சேர்த்து வருகிறது. மேலும், நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஏராளம். அப்படிப் போராடிய தியாகச் செம்மல்தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு அரசின் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் புகழை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதோடு, இளம் தலைமுறையினர் சுதந்திர போராட்ட வீரர்களை தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான மணிமண்டபங்கள், நினைவு சின்னங்கள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அன்னாரது வாழ்க்கை வரலாறு வரும் சந்ததியினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில ஒளி ஒலி காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவ, மாணவியர்கள் அரசு போட்டித் தேர்விற்கு பயிலுவதற்கு ஏதுவாக மணிமண்டப வளாகத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நிழற்கூடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் ஆர்.ஒ குடிநீர் வசதி மற்றும் நூலகம் வசதியும் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் பிறந்த நாள் விழா மற்றும் நினைவு நாள் விழாவை தொடர்ந்து கௌரவிக்கப்பட்டு வருகிறது. மேலும், இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், களக்காடு நகர்மன்ற தலைவர் பி.சி.ராஜன், மண்டல தலைவர் கஜிதா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினர் சகாய ஜீலியட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, திருநெல்வேலி வட்டாட்சியர் சந்திரகாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன் முக்கிய பிரமுகர்கள் ஜோசப்பெல்சி, சித்திக், பரமசிவன் ஜயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:27:07 PM (IST)

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு : பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)

நெல்லை திருமண்டல தேர்தலை உடனே நடத்த வேண்டும்: முன்னாள் லே செயலர் வேதநாயகம் வலியுறுத்தல்
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:28:27 AM (IST)

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 51.1 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு : சபாநாயகர் அப்பாவு தகவல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:34:38 PM (IST)
