» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இந்தியன் வங்கியில் நெட்வொர்க் பிரச்சனை: வாடிக்கையாளர்கள் அவதி
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:59:35 AM (IST)

தூத்துக்குடியில், இந்தியன் வங்கியில் இன்று 2வது நாளாக நெட்வொர்க் பிரச்சனை தொடர்வதால் வங்கி சேவை பாதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.
தூத்துக்குடி பீச் ரோட்டில், சப் கலெக்டர் அலுவலகம் அருகே இந்தியன் வங்கியின் பிரதான கிளை இயங்கி வருகிறது. இந்த கிளையை ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் வங்கியில் நெட்வொர்க் முடங்கியது. இதனால் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, மற்றும் மற்ற பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இன்று காலையிலும் நெட்வொர்க் கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு அலுவல் இடையே வங்கியில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, நெர்வொர்க் பிரச்சனை தொடர்பாக வங்கியில் ஒரு கருவி மாற்றப்பட்டது. அதன் பின்னரும் சரி செய்ய முடியவிலலை. எனினும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
AlexanderSep 16, 2025 - 06:20:28 PM | Posted IP 162.1*****
இன்று சரி செய்யப்பட்டு காசோலை செலுத்தி வந்தேன்
முருகன்Sep 16, 2025 - 06:19:01 PM | Posted IP 104.2*****
இன்று இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு எனது பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிவடைந்தது
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

மகிழ்Sep 16, 2025 - 06:22:07 PM | Posted IP 104.2*****