» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்: எஸ்பி.சண்முகநாதன் பேச்சு!!

புதன் 17, செப்டம்பர் 2025 10:10:03 AM (IST)



தற்போது உள்ள சூழ்நிலையில் எப்போது தேர்தல் வந்தாலும் அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்பி.சண்முகநாதன் பேசினார். 

பேரறிஞர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் அண்ணா நகர் 7 மெயின் ரோட்டில் மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஜி ராஜேந்திரன், தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

அப்போது பேசிய அமைப்பு செயலாளர் பி.ஜி ராஜேந்திரன் "எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட 7.5% இட ஒதுக்கீடு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளிகள் பயிலும் 4000 ஏழை எளிய மாணவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் எல்லாம் மருத்துவராகியுள்ளனர் என்றார். கடந்த அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்களை கொண்டு வந்து நல் ஆட்சி நடைபெற்றது. வருகிற காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சராக ஆகவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. 

2026ல் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமையும் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது . கடந்த அதிமுக ஆட்சியின் போது கனிமொழி எம்.பி விதவைகள் அதிகமாகி விட்டதாக குறிப்பிட்டார் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் எங்கள் அண்ணன் மதுவிலக்கை அமல்படுத்துவார் என்றார். மது ஆலைகளை வைத்துள்ள கனிமொழி, ஆற்காடு வீராச்சாமி,ஜெகத்ரட்சகன் ஆகிய திமுகவைச் சேர்ந்த நீங்கள் தயாரிக்கும் மது ஆலைகளை மூடினால் யாரும் விதவையாக மாட்டார்கள் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முகநாதன், திமுகவை ஆரம்பித்தவர்களின் வாரிசுகள் தற்போது ஆட்சி நடத்தவில்லை அதற்கு சம்பந்தமில்லாத கருணாநிதியின் குடும்பம் இன்று மன்னர் ஆட்சி போன்று கட்சியையும் ,ஆட்சியையும் நடத்தி வருகிறார்கள் . எம்.ஜி.ஆர் , அண்ணா பெயரிலே கட்சி ஆரம்பித்தது கருணாநிதி போன்ற தீய சக்தி தமிழ்நாட்டிலேயே இருக்கக் கூடாது என்பதற்காக பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்ட கட்சி கொடியுடன்ஆரம்பிக்கப்பட்டது தான் அதிமுக. 

ஆனால் அண்ணாவை மறந்து விட்ட திமுகவினர் தற்போது தேர்தல் வருவதால் அண்ணாவின் படத்தை இன்று பயன்படுத்தி வருகின்றனர் இல்லை என்றால் கலைஞர் தான் தமிழகத்துக்கு அனைத்தும் செய்தவர் என்று கூறுவார்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ,புரட்சி தலைவி அம்மாவுக்கு பிறகு மாபெரும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி உருவாகி உள்ளார். அதிமுகவில் உழைத்தவர்களுக்கு என்றும் மரியாதை உண்டு என்பதற்கு உதாரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார் . அதிமுகவே அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்களே தவிர வேறு யாரும் அழிந்து போக மாட்டார்கள் .

கடந்த தேர்தலில் அதிமுக இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தது. தற்போது நடைபெறுவது சட்டமன்றத் தேர்தல் இதில் ஸ்டாலினா? எடப்பாடியாரா? என்பதில்தான் போட்டி? புரட்சித்தலைவி அம்மாவின் மறைவி்ற்கு பிறகு நாண்காண்டு காலம் நல்லாட்சி செய்த எடப்பாடியாரா? தற்போது திராவிடம் ஆனால் ஆட்சி என்ற பெயரில் பொது மக்களை வாட்டிவதைத்து வரும் ஸ்டாலினா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள், தற்போது உள்ள சூழ்நிலையில் எப்போது தேர்தல் வந்தாலும் அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். 

அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நின்றால் வாக்குகள் வித்தியாசத்தில் எது பெரிய கட்சி என்பது தெரியும் அதில் அதிமுக தான் தமிழகத்தில் பெரிய கட்சி என்பது தெரிந்துவிடும் . திமுக இருக்கிற இடமே தெரியாமல் போய்விடும். தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததைக் கண்டு திருமாவளவன் கதறுகிறார். எனவே வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளார் கல்வி குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மந்திரமூர்த்தி, ஸ்ரீவை மேற்கு ஒன்றியசெயலாளர் காசிராஜன், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளர் பூந்தோட்டம் மனோகரன்,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் தெற்கு பகுதி பொறுப்பாளர் சுடலைமணி நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 17, 2025 - 05:09:47 PM | Posted IP 104.2*****

அங்கே டெல்லியில் இவனுக தலைமை அடிமை சாசனம் எழுதி கொடுத்து நடத்தும் நாடகங்களுக்கு குறைவில்லை. இங்கே வெட்கமே இல்லாமல் எப்படித்தான் பேச முடியுதோ தெரியலை. தமிழ்நாட்டில் நாங்கள் தான் கூட்டணிக்கு தலைமை என்று பீத்துமானம். ஆனால் கூட்டணி கட்சியை பார்க்க காத்துக்கிடக்கும் டெல்லியில

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory