» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு!

வியாழன் 18, செப்டம்பர் 2025 8:16:59 AM (IST)

கோவில்பட்டி அருகே கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியதில், லாரி டிரைவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தால் எட்டயபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து நேற்று மாலையில் கோவில்பட்டிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டியை சேர்ந்த போத்திராஜ் ஓட்டி வந்தார். மாலை 3.30 மணியளவில் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் அரசு பஸ் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராத விதமாக எதிரே ராஜபாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. 

இதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் பலத்த காயமடைந்தார். அதேசமயம் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் பலத்த காயமடைந்த லாரி டிரைவரை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கன்டெய்னர் லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory